Paristamil Navigation Paristamil advert login

40% சதவீத விமான சேவைகள் பாதிப்பு!!

40% சதவீத விமான சேவைகள் பாதிப்பு!!

2 ஆடி 2025 புதன் 20:06 | பார்வைகள் : 739


நாளை ஜூலை 3, வியாழக்கிழமை விமான கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், 40% சதவீத விமானங்கள் பாதிக்கப்பட உள்ளன.

சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களில் 25% சதவீத பாதிப்பும், நீஸ் (nice) விமான நிலையத்தில் 50% சதவீத பாதிப்பும் ஏற்பட உள்ளது.  அத்தோடு  Lyon, Marseille, Montpellier, Ajaccio, Bastia, Calvi மற்றும் Figari விமான நிலையங்களில் 30% சதவீத சேவைகள் இயக்கப்படமாட்டாது. 

இந்த அறிவித்தலை Direction générale de l'Aviation civile  இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.பயணிகள் விமான நிலையத்தை தொடர்புகொண்டு விசாரித்து விட்டு, விமான பயணங்களை பிற்போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளை, மறுநாள் வெள்ளிக்கிழமையும் விமான சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்