டிஜிட்டல் Carte grise இனி உங்கள் ஸ்மார்ட்போனில்!!

3 ஆடி 2025 வியாழன் 11:28 | பார்வைகள் : 1639
2025 ஜூன் 30ஆம் தேதி முதல், France Identité என்ற செயலியில் உங்கள் காரின் பதிவு சான்றிதழான கார்டு கிரிஸ்-ஐ (Carte grise) டிஜிட்டலாக ஸ்மார்ட்போனில் பெற முடியும்.
செயலியை பதிவிறக்கம் செய்து, "+” அல்லது "Ajoutez un titre" என்பதை அழுத்தி, கார்டு கிரிஸ் விவரங்களை உள்ளிட்டு ஸ்கேன் செய்தால், அது செயலியில் சேமிக்கப்படும். ஒரே செயலியில் பல கார்களின் கார்டு கிரிஸ்-களையும் சேர்க்க முடியும்.
இந்த வசதி, வாகன உரிமையாளர், கூட்டுரிமையாளர் அல்லது தனியார் வாடகையாளராக (leasing உட்பட) பதிவாகியுள்ள நபர்களுக்கே உரியது. இது பிரான்ஸில் பதிவு செய்யப்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, கார்கள், நான்குச்சக்கர வாகனங்கள், மற்றும் இரண்டு/மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையாகும்.
டிஜிட்டல் பதிவு ஆவணத்தின் நன்மைகள்
- உங்கள் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு ஆவணத்தை (Carte grise) ஒரே விண்ணப்பத்தில் இணைக்க முடியும்.
- சாலை சோதனையின் போது உங்கள் ஆவணங்களை எளிதாக சமர்ப்பிக்கலாம்.
- உங்கள் பதிவு ஆவணத் தகவலை விரைவாகப் புதுப்பிக்கவும் முடியும்.