ஆசிய கோப்பை தகுதி சுற்று; ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா

3 ஆடி 2025 வியாழன் 11:55 | பார்வைகள் : 123
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது தொடர், 2026 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
இதில் 12 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் இரு போட்டியில் மங்கோலியா (13-0), திமோர்-லெஸ்தே (4-0) அணிகளை வென்றது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஈராக்கை எதிர்கொண்டது.
இந்தியா தரப்பில், 14 வது நிமிடத்தில் சங்கீதா முதல் கோலை அடிக்க, 44வது நிமிடத்தில் மனிஷா 2வது கோல் அடிப்பார்.
தொடர்ந்து 47வது நிமிடத்திலே தமிழக வீராங்கனையான கார்த்திகா 3வது கோலை அடிப்பார்.
இதனையடுத்து, 64வது நிமிடத்தில் நிர்மலா தேவி 4வது கோலையும், 80வது நிமிடத்தில் ரத்தன்பாலா தேவி (80) 5வது கோலையும் அடித்தனர்.
இதன் மூலம், 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தனது 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
வரும் ஜூலை 5 ஆம் திகதி தாய்லாந்திற்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால், 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பை தகுதி பெரும்.
25 வயதான கார்த்திகா, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் காரியப்பட்டியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஆவார்.