சேட்ஜிபிடியை அதிகமாக நம்ப வேண்டாம் - அதன் உரிமையாளரே சொன்ன அதிர்ச்சி தகவல்

3 ஆடி 2025 வியாழன் 12:55 | பார்வைகள் : 430
சேட்ஜிபிடியை அதிகமாக நம்ப வேண்டாம் என சாம் அல்ட்மன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் யுகத்தில், சாதாரண சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது தொடங்கி, கோடிங் எழுதி தருவது, படங்களை உருவாக்குவது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு, Open AI நிறுவனத்தின் ChatGPT யை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், நிகழ்வு ஒன்றில் பேசிய அதன் நிறுவனர்களில் ஒருவரான சாம் அல்ட்மன், சேட்ஜிபிடியை அதிகளவு நம்ப வேண்டாம் என கூறியிருப்பது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "சாட்ஜிபிடியை மக்கள் அளவுக்கு அதிகமாக நம்புகிறார்கள். அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், சாட்ஜிபிடியை அதிகளவில் நம்ப வேண்டாம்.
ஏனென்றால் செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும். தவறான தகவல்களையும், கணிப்புகளையும் உருவாக்க கூடும்.
எங்களது தயாரிப்பு தொடர்பாக நேர்மையான சில விஷயங்களைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். தற்போதைய தொழில்நுட்பத்தின் உண்மைத்தன்மை மிகச் சிறப்பானதாக இல்லை" என தெரிவித்துள்ளார்.