Paristamil Navigation Paristamil advert login

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம்- ஒரு அரிய கண்டுபிடிப்பு

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம்- ஒரு அரிய கண்டுபிடிப்பு

3 ஆடி 2025 வியாழன் 13:55 | பார்வைகள் : 166


சுவிஸ் விண்வெளி தொலைநோக்கி ஒன்றின் உதவியால், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.

சுவிஸ் விண்வெளி தொலைநோக்கியான CHEOPSஇன் உதவியுடன் புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.

அந்த கிரகத்துக்கு HIP 67522 b என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம் என விமர்சிக்கப்படுகிறது.

அதற்குக் காரணம் என்னவென்றால், அந்த கிரகம் மிக வலிமையான சூரிய ஆற்றலை அல்லது எரிப்புகளை (Solar flares) வெளியிடுகிறது.

விடயம் என்னவென்றால், அந்த சூரிய ஆற்றல் மிகவும் வலிமையாக இருப்பதால், அந்த ஆற்றல், அந்த கிரகத்தின் வளிமண்டலத்தையே தாக்கி, அந்த கிரகத்தையே சுருங்கச் செய்கிறது.

தற்போது ஜூபிடர் கிரகத்தின் அளவில் காணப்படும் இந்த கிரகம், அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் நெப்டியூன் கிரகம் அளவுக்கு சுருங்கிவிடலாம் என கருதப்படுகிறது.

ஆகவேதான், அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம் என விமர்சிக்கப்படுகிறது.

இப்படி தன்னைத்தான் அழித்துக்கொள்ளும் ஒரு கிரகம் ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்