சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா?

3 ஆடி 2025 வியாழன் 13:12 | பார்வைகள் : 712
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‛வட சென்னை' படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிம்புதான். ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக தனுஷை வைத்து இயக்கினார். இந்த நிலையில் வட சென்னை கதைக்களத்தில் தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிம்பு - வெற்றிமாறன் இணையும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களில் நடித்த சிவராஜ் குமார் இந்த படத்தில் எந்த மாதிரி ரோலில் நடிக்கிறார் என்பது விரைவில் தெரியவரும். அதோடு இப்படத்தில் குட் நைட் படத்தில் நடித்த மணிகண்டனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025