Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் 2 பெண்கள் மீது கத்திக்குத்து - வீட்டிற்கும் தீ வைப்பு ; சந்தேகநபர் மரணம்

வவுனியாவில் 2 பெண்கள் மீது கத்திக்குத்து - வீட்டிற்கும் தீ வைப்பு ; சந்தேகநபர் மரணம்

3 ஆடி 2025 வியாழன் 13:55 | பார்வைகள் : 1542


வவுனியா சமயபுரம் பகுதியில் மனைவி மற்றும் மாமியாரை (மனைவியின் தாய்) ஆகியோரை கத்தியால் குத்தி வீட்டிற்கு தீ வைத்த சந்தேக நபர் குறித்த வீட்டின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கிருஸ்ணகுமார் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வசந்தி (வயது 30) அவரது தாயாரான (இந்திரா வயது 69) ஆகிய இரு பெண்களும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு  நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சென்ற குடும்பஸ்தர் வீட்டில் இருந்த மனைவியையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய பின்னர்  வீட்டையும் தீ வைத்து கொழுத்தியுள்ளார்.

வீடு தீ பற்றி எரிவதனை கண்ணுற்ற அயலவர்கள் வீட்டிற்குள் சென்ற போது, கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த இரு பெண்களையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு பெண்களையும் கத்தியால் குத்திய நபரை அயலவர்கள் தேடிய போது, குறித்த நபர் வீட்டின் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்