Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் காட்டுத் தீ அவசர நிலை அறிவிப்பு

கனடாவின் காட்டுத் தீ  அவசர நிலை அறிவிப்பு

3 ஆடி 2025 வியாழன் 15:55 | பார்வைகள் : 187


கனடாவின் பல மாகாணங்களில் தற்போது காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தீப்பரவல்கள் காரணமாக அவசர நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

மக்கள் வெளியேற்றப்படுவதை பொது பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக லைட்டன் (Lytton) என்ற பகுதியில் ஏற்பட்ட தீவிர காட்டுத் தீ காரணமாக, அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பல குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெஸ்டர்ன் கனடாவில் அமைந்துள்ள யுகான் மாகாணத்தில், வைட் ஹார்ஸிலிருந்து வடக்கு நோக்கி நான்கு மணி நேர பயணத்தில் அமைந்த எதல் ஏரிக்குப் (Ethel Lake) புறம் இருந்த வெளியேற்ற உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஜூன் 24ம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு வராத நிலையிலேயே உள்ளது.

அல்பெர்டா மாகாணத்திலும் காட்டுத் தீ அபாயம் நீடிக்கிறது. இங்கு 67 காட்டுத் தீக்கான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 18 தீ விபத்துகள் தற்போது கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளன.

கனடிய காடுத்தீ முகாமைத்துவ மையத்தின் (CIFFC) தகவலின்படி, நாட்டிலெங்கும் தற்போது 465 காட்டுத் தீகள் செயலில் உள்ளன.

பொது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த காட்டுத் தீ சம்பவங்களை கட்டுப்படுத்த தீயணைப்பு குழுக்கள் முழுமையான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. 

அவசர நடவடிக்கைகள், வெளியேற்ற உத்தரவுகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்