Paristamil Navigation Paristamil advert login

கீரைகளில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும் !!

கீரைகளில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும் !!

18 ஆனி 2022 சனி 07:47 | பார்வைகள் : 9235


 கீரைகள் என்றாலே கண்களின் ஆரோக்கியத்திற்கான மிகச் சிறந்த உணவு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையும், பொன்னாங்கண்ணி கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும்.

 
கீரைகள் அனைத்துமே உடலுக்கு தேவையான பல சத்துகளை கொண்டதாகும். பொன்னாங்கன்னி கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும் தேவையான இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் ஏராளம் உள்ளன
 
பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி, மிக சிறியளவில் நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் தூய்மை அடையும்.
 
கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் இந்த கீரைகளில் நிரம்பியுள்ளன. எனவே இந்த கீரைகளை உங்களுக்கு விருப்பமான முறையில் சமைத்து உணவில் எடுத்துக்கொள்வது கண்பார்வையை அதிகரிக்க மிகவும் உதவும்.
 
முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை அதிகமாக உள்ளது. முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும்.
 
முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்தக் கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும்.
 
காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை நீங்கும்.
 
முருங்கை கீரையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்