வானூர்தி போக்குவரத்து கண்காணிப்பாளர்களின் வேலைநிறுத்தம்: 1500.விமானங்கள் ரத்து!

4 ஆடி 2025 வெள்ளி 12:20 | பார்வைகள் : 260
பிரான்சில் ஜூலை 3ஆம் தேதி வியாழனன்று நடைபெற்ற வானூர்தி போக்குவரத்து கண்காணிப்பாளர்களின் (CONTRÔLEURS AÉRIENS) வேலைநிறுத்தம் காரணமாக, 933 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளிக்கிழமை 4ஆம் தேதியன்று கூடுதல் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1,500 விமானங்கள் ரத்து
பிரான்சின் பொதுமக்கள் விமான சேவைகளின் பொதுத் தலைமையகமான (DGAC) தெரிவித்த தகவலின்படி, ஜூலை 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் மொத்தம் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் தாக்கம் பல ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
பணி புரியாத கண்காணிப்பாளர்களின் விகிதம் 26.2 சதவகிதமதக ஆக இருந்தது, இது 272 வானூர்தி கண்காணிப்பாளர்களை குறிக்கிறது. 3 லட்சம் பயணிகள் இவர்களது வேலைநிறுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய விமான நிலையங்கள் பாதிப்பு
ஜூலை 3 அன்று மட்டும், 933 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட விமான சேவையின் 10 சதவீதம் ஆகும்.
நீஸ் விமான நிலையத்தில் பாதிப்பு மிக அதிகம். பாதி விமானங்கள் பாதிக்கப்பட்டன.
பரிசின் ஓர்லி மற்றும் CDG விமான நிலையங்களில் பாதிப்பு சுமார் 25 சதவீதம்.
விமானப்பயணிகள் கோடை விடுமுறையை இழக்கிறார்கள்
DGAC தலைமை இயக்குநர் Ourania Georgoutsakou, இந்த வேலைநிறுத்தம் 'விரும்பத்தகாத மற்றும் தடுக்கவேண்டிய' ஒன்று எனக் கண்டித்துள்ளார்.
'ஐரோப்பாவில் ஏற்கனவே மிக மோசமான தாமதங்களை ஏற்படுத்தும் பிரெஞ்சு விமான கண்காணிப்பு சேவைகள், இப்போது ஒரு சிறிய குழுவினரால் மேலும் கோடை விடுமுறை பயணங்களை சீர்குலைக்கின்றன.' வேலைநிறுத்தம் சட்டப்படி உரிமையாக இருந்தாலும், இதுபோன்ற முக்கியமான காலக்கட்டத்தில் மக்கள் மீது தவிர்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
பிரதமர் பய்ரூவின் கண்டனம்
'இது ஒரு அதிர்ச்சியளிக்கும் வேலைநிறுத்தம். நாடு முழுவதும் மக்கள் விடுமுறைக்குச் செல்வதற்காக தயாராகும் நாளில் இப்படி வேலைநிறுத்தம் செய்யப்படுவது, பிரஞ்சுக்களை பிடியில்படுத்துவது போன்றதுதான்.' என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பின்விளைவுகள்
இந்த வேலைநிறுத்தம் விமான பயணத் திட்டங்களை மட்டுமல்ல, பிரான்சின் சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறைக்கும் பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று கணிக்கப்படுகிறது.
புதிய போராட்டங்கள் அல்லது அரசு நடவடிக்கைகள் குறித்து இன்னும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.