Paristamil Navigation Paristamil advert login

BAC பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! - 97.1% தேர்ச்சி!!

BAC பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! - 97.1% தேர்ச்சி!!

4 ஆடி 2025 வெள்ளி 12:46 | பார்வைகள் : 691


இளங்கலை பரீட்சைகள் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற நிலையில், அதன் பெறுபேறுகள் இன்று ஜூலை 4, வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன.

 

  1. பொதுத்துறையில் ( voie générale) 97.1% சதவீதமானவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
  2. தொழில்நுட்பத்துறையில் (technologique ) 90.9% சதவீதமானவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
  3. தொழில்முறை துறையில் (professionnelle ) 81.32% சதவீதமானவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை முதல் வெளியாகிவரும் முடிவுகள், முழுமையாக வெளியாக  வரும் ஜூலை 7 ஆம் திகதிவரையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் பரீட்சை எழுத 8 வயதுடைய சிறுமி ஒருவர் தெரிவான நிலையில், அவர் பரீட்சைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் 720,806 பேர் பரீட்சை எழுதியிருந்தார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்