Paristamil Navigation Paristamil advert login

செம்மணியில் மேலும் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

செம்மணியில் மேலும் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

4 ஆடி 2025 வெள்ளி 13:09 | பார்வைகள் : 154


யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த அகழ்வு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 முழுமையான எலும்புக்கூடுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்