கடலில் மூழ்கி 7 வயது சிறுமி பலி! - 15 பேர் மீட்பு!!

5 ஆடி 2025 சனி 07:00 | பார்வைகள் : 623
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 15 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
Watten (Nord) நகர கடற்பிராந்தியத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிய படகு ஒன்றில் 16 பேர் கொண்ட குழு ஒன்று பிரித்தானியா நோக்கி பயணித்த வேளையில், அவர்களது படகு திசை திரும்பி கடலில் தத்தளிக்க தொடங்கியுள்ளது. நான்கு நாட்களாக அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் அவர்களது படகி கடலில் மூழ்கியுள்ளது.
இதில் 7 வயதுடைய சிறுமி கொல்லப்பட்டுள்ளார். ஏனைய 15 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த படகில், வழிகாட்டி யாரும் இல்லை எனவும், அது திருடப்பட்ட படகு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.