Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.12 லட்சம் நிதியுதவி

சீனாவில் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.12 லட்சம் நிதியுதவி

5 ஆடி 2025 சனி 08:28 | பார்வைகள் : 234


சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு காரணமாக, மக்கள் தொகை சரிவு உலகளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

மக்கள் தொகையில் உலகளவில் முதலிடத்தில் இருந்த சீனாவும், இந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தனது ஒரு குழந்தை திட்டத்தை சீனா 10 ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டு விட்டது.

இருந்தும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் உலகின் முன்னணி நாடாக விளங்கி வரும் சீனாவுக்கு, இது முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு சீனா நிதியுதவி வழங்கி வருகிறது.

முன்னதாக, 2025 ஆம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு சீன அரசு சார்பில், 3 வயது வரை ஆண்டுதோறும் 3500 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,000) வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் ஹோஹாட் பகுதியில் இரண்டாவது குழந்தைக்கு 50,000 யுவானும், மூன்றாவது குழந்தைக்கு 1 லட்சம் யுவானும் (இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம்) வழங்கப்படுகிறது.

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, தென்கொரியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், இதே போன்ற திட்டத்தை, செயல்படுத்தி வருகின்றன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்