நூறு வருடங்களின் பின்னர் சென் நதியில் நீச்சல்!!

5 ஆடி 2025 சனி 11:56 | பார்வைகள் : 561
சென் நதியில் பொதுமக்கள் நீந்துவதற்கு கடந்த 1923 ஆம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நூற்றாண்டின் பின்னர் இன்று ஜூலை 5, சனிக்கிழமை முதல் சென் நதியில் நீந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் ஏராளமான மக்கள் Marie arm பகுதியில் நீச்சலில் ஈடுபட்டுள்ளதை பார்க்கக்கூடியதாக இருந்தது. 25°C வரை நிலவும் பரிசின் வெப்பத்தை தணிக்க, நீச்சலில் ஈடுபட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் நீந்த முடியும் எனவும், பாதுகாப்பு கடமையில் வீரர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை இந்த சென் நதி நீச்சல் பகுதிகள் திறக்கப்படும் என பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.