Paristamil Navigation Paristamil advert login

இஞ்சி துவையல்!!

இஞ்சி துவையல்!!

5 ஆடி 2025 சனி 15:40 | பார்வைகள் : 222


இஞ்சி (Ginger) என்பது ஒரு மருத்துவ குணமுள்ள மூலிகை உணவுப் பொருளாகும். இது இந்திய சமையலிலும் சித்த மருத்துவத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இஞ்சி உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது. அதாவது செரிமானத்திற்கு, இதய நலம், மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

அந்த வகையில் இஞ்சி வைத்து ஒரு மாதம் வரை ஸ்டோர் பண்ணி வைக்கிற மாதிரி வெங்காயம், தக்காளி சேர்க்காமல் சூப்பர் டேஸ்டா ஒரு துவையல் செய்ய முடியும் அதுதான் இஞ்சி துவையல். இது சாப்பாடு, சப்பாத்தி கூட வைச்சு சாப்பிடலாம். குறிப்பாக ஹாஸ்டல் இருக்கவுங்க, பேச்சுலர்ஸ்க்கு இந்த இஞ்சி துவையல் ஒரு வரம் தாங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் இஞ்சி துவையல் ரெசிபி பார்க்கலாம் வாங்க..

இஞ்சி துவையல் செய்ய தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், நான்கு டேபிள் ஸ்பூன் உளுந்து, மூன்று டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு நான்கு டேபிள் ஸ்பூன் மல்லி ( தனியா), 150 கிராம் இஞ்சி, 10 வரமிளகாய், எலுமிச்சை அளவு புளி,4 பல் பூண்டு, தேவையான அளவு உப்பு, சீரகம், சிறிதளவு வெல்லம்.தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்தம் பருப்பு,கடலை பருப்பு, மல்லி (தனியா) , இஞ்சி, வரமிளகாய், பூண்டு, புளி, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு வெல்லம் சேர்த்து தண்ணீர் இல்லாமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எடுத்து கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் பண்ணி வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் அட்டகாசமான சுவையில் இஞ்சி துவையல் ரெடி.

வர்த்தக‌ விளம்பரங்கள்