கிளப் உலகக்கிண்ணப் போட்டியில் பாயர்ன் முனிச் அதிர்ச்சி தோல்வி

6 ஆடி 2025 ஞாயிறு 12:05 | பார்வைகள் : 119
ஃபிபா கிளப் உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் பாயர்ன் முனிச் அணிகள் மோதின.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியின் கை ஓங்கியது.
PSGயின் டெசிரே டௌவ் (Desire Doue) 78வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 90+6வது நிமிடத்தில் PSG வீரர் ஓஸ்மானே டெம்பெலே கோல் அடித்தார்.
கடைசி வரை பாயர்ன் முனிச் அணியால் கோல் அடிக்க முடியாததால், PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் PSGயின் வில்லியன் பேச்சோ (82வது நிமிடம்), லூகாஸ் ஹெர்னாண்டஸ் (90+2) ஆகிய இருவரும் சிவப்பு அட்டை பெற்றனர்.