Paristamil Navigation Paristamil advert login

சகலவிதமான நோய்களையும் குணமாக்கும் தேங்காய் !!

சகலவிதமான நோய்களையும் குணமாக்கும் தேங்காய் !!

17 வைகாசி 2022 செவ்வாய் 06:56 | பார்வைகள் : 9215


 தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.

 
இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு. தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளிக்கலாம்.
 
சிலர் தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனைக் கொண்டு உணவுகளை செய்வர். இது தவறானது. ஏனெனில், இதில் நீங்கள் தேங்காயில் உள்ள நார்ச்சத்தை நீக்கி விட்டு வெறும் கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்டை மட்டுமே எடுத்துக் கொள்கிறீர்கள்.
 
நார்ச்சத்து இன்றி வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டும் எடுத்துக் கொள்வது உங்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.
 
தேங்காயை சிலர் பொரியலுக்குத் துருவலாக பயன்படுத்துவர். அப்படி எடுத்துக் கொள்வது நல்லது தான். அதேபோல், தேங்காய் சட்னியாகவும் இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
 
மேலும், வெறும் தேங்காயை சில சில்லுகள் மென்று கூட சாப்பிடலாம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவில் தேங்காயை அப்படியே சாப்பிட வேண்டாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்