பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் சர்ச்சையை ஏற்படுத்திய பழைய தொலைபேசி உரையாடல்

10 ஆடி 2025 வியாழன் 11:16 | பார்வைகள் : 260
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும், மூத்த அரசு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த பழைய உரையாடலின் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்கள் காரணமாக ஒகஸ்ட் 5 தனது பதவியை இராஜினாமா செய்து ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார்.
மாணவர் போராட்டங்களை ஒடுக்க ஷேக் ஹசீனா மனிதாபிமான மீறல் குற்றங்களை ஏவியதாக புதிதாக அமைந்த இடைக்கால அரசு குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது வெளியான ஆடியோவில், ஷேக் ஹசீனா, போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தவும், போராட்டக்காரர்களை எங்கு பார்த்தாலும் சுடவும் பாதுகாப்புப் படையினரிடம் ஹசீனா கூறுவதைக் கேட்க முடிகிறது.
அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
இந்த ஆடியோ, ஜூலை 18 அன்று டாக்காவில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபபனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்யப்பட்டது.
இந்த அழைப்பிற்குப் பிறகு டாக்கா முழுவதும் இராணுவ நிலை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பதிவுகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.
தடயவியல் ஆய்வாளர்களும் இந்த ஆடியோ உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர்.
ஷேக் ஹசீனா தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலைக்காக விசாரணையில் உள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.