ஏமனில் கேரள நர்சுக்கு மரண தண்டனை; தடுத்து நிறுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

10 ஆடி 2025 வியாழன் 09:39 | பார்வைகள் : 182
ஏமனில் வரும் ஜூலை 16ம் தேதி கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 38. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.அவருக்கு அந்நாட்டு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16ல் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 10) மரண தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் ராகேந்திர பசந்த், நீதிபதிகள் சுதன்ஷு துலியா, ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், அவசரமாக பட்டியலிடக் கோரி மனு தாக்கல் செய்தார். ஜூலை 14ம் தேதி வழக்கை பட்டியலிட பெஞ்ச் ஒப்புக்கொண்டது.
ஜூலை 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதால், இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது, இன்று அல்லது நாளை விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகளிடம் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.