Paristamil Navigation Paristamil advert login

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

10 ஆடி 2025 வியாழன் 14:17 | பார்வைகள் : 181


இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவுவதால், நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றதுஃ

இதன் காரணமாக, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வெப்பம் காரணமாக மக்களின் நீர்த்தேவையும் அதிகரித்துள்ளது.

எனவே, குடிநீர் விநியோகம் குறைவடைந்துள்ளதன் காரணமாக அனைவரும் அத்தியாவசிய மற்றும் அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்