Paristamil Navigation Paristamil advert login

'நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வு' 8 நாடுகள் மீது டிரம்ப் புதிய வரி விதிப்பு

'நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வு' 8 நாடுகள் மீது டிரம்ப் புதிய வரி விதிப்பு

10 ஆடி 2025 வியாழன் 17:25 | பார்வைகள் : 182


'நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை' காரணம் காட்டி டிரம்ப் எட்டு நாடுகள் மீது புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தியுள்ளார்.

"நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை" சரி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி, எட்டு நாடுகள் மீது புதிய, குறிப்பிடத்தக்க வரிகளை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மீது 50% என்ற அதிகபட்ச புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் 30% வரியைச் சந்திக்கவுள்ளன. 

புருனே மற்றும் மால்டோவாவுக்கு 25% வரியும், பிலிப்பைன்ஸுக்கு 20% வரியும் விதிக்கப்படும்.

பிரேசில் மீதான 50% வரி விதிப்பு, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்படி, அமெரிக்காவின் ஆதரவாளரான போல்சனாரோ, கடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

தற்போதைய பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வாவுக்கு டொனால்ட் டிரம்ப் முன்னதாக ஒரு கடிதம் எழுதி, இந்த விசாரணையை கைவிடுமாறு கோரியிருந்தார். 

இந்த கோரிக்கையை தொடர்ந்தே புதிய வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்