முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் மீது அவதூறு பரப்பிய இரு பெண்கள் - நீதிமன்றத்தில்..!!

11 ஆடி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1794
முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் மீது அவதூறு பரப்பிய இரு பெண்கள் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டனர்.
பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என அவ்விரு பெண்களும் இணையத்தளம் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பியுள்ளனர். Natacha Rey மற்றும் Amandine Roy எனும் இரு பெண்களே அவதூறு பரப்பியிருந்தார்கள். அவர்களிக்கு 500 யூரோக்கள் குற்றப்பணமும், பிரிஜித் மக்ரோனுக்கு இழப்பீடாக 8,000 யூரோக்கள் இழப்பீடும், பிரிஜித்தின் சகோதரன் Jean-Michel Trogneux இற்கு 5,000 யூரோக்கள் இழப்பீடும் வழங்கவேண்டும் எனவும் நீதிமன்று தீர்ப்பளித்தது.
பிரிஜித் மக்ரோன் மீதான இந்த குற்றச்சாட்டு கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இணையத்தில் சுற்றிவருகிறமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3