பா.ம.க., சேரும் அணி மிகப்பெரிய வெற்றி பெறும்; ராமதாஸ்

11 ஆடி 2025 வெள்ளி 09:35 | பார்வைகள் : 153
பா.ம.க., எந்த அணியோடு சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வெற்றியை பெறும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி வன்னியர் மகளிர் பெருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விழா நடைபெறும் மைதானத்தை இன்று ராமதாஸ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பூம்புகாரில் இது போன்ற மாநாடு 13 முறை நடந்துள்ளது. சற்று இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
பெண்மையைப் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் நிலம் அதிகமாக இருந்தால் கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.
பா.ம.க., எந்த அணியோடு சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வெற்றியை பெறும். பா.ம.க,வில் தொண்டர்களுக்குள் குழப்பம் இல்லை. பா.ம.க.,வில் தற்பொழுது குழப்பம் ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணி மாநாட்டில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு, ''போக போக தான் தெரியும்'' என பாடல் மூலம் ராமதாஸ் பதில் அளித்தார். தி.மு.க., உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, ''பத்து காக்கா பறந்தது. அதில் ஐந்து காக்கா வெள்ளை காக்கா, அதுதான் சொல்லி இருக்கும் என நினைக்கிறேன்'', என ராமதாஸ் சிரித்தப்படி தெரிவித்தார்.