"solution à deux États" - பரிசுடன் இணைந்துகொள்ள லண்டனுக்கு அழைப்பு!!

11 ஆடி 2025 வெள்ளி 08:54 | பார்வைகள் : 537
இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் இரு நாடுகளாக உருவாக்குவதே நீண்டகால பிரச்சனைக்கு திரிவாக அமையும் என ஜனாதிபதி மக்ரோன் நேற்று முன்தினம் புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த ”இரு நாடுகள் தீர்வு’ (solution à deux États) உருவாக்கத்தோடு இணைந்துகொள்ளுமாறு லண்டனை ஜனாதிபதி மக்ரோன் அழைத்துள்ளார். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது உடனடியான மற்றும் நிரந்தரமான தீர்வாக அமையும் என நேற்று வியாழக்கிழமை மாலை மேற்கொண்ட ஊடக சந்திப்பில் மக்ரோன் குறிப்பிட்டார்.
காஸாவில் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க சரியான வழி இதுவாக தான் இருக்கும் எனவும், இதில் பிரித்தானியாவும் இணைந்துகொள்ள வேண்டும் என பிரதமர் கியர் ஸ்டாமரை அருகில் வைத்துக்கொண்டு இதனை மக்ரோன் குறிப்பிட்டார்.