வார இறுதி நாட்களில் மிக கடுமைன போக்குவரத்து நெரிசல்! - சிவப்பு மற்றும் கறுப்பு எச்சரிக்கை!!

11 ஆடி 2025 வெள்ளி 09:54 | பார்வைகள் : 1028
ஜூலை 14, விடுமுறை நாளை ஒட்டி, இந்த வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையினால், வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வெளிச்செல்லும் வீதிகள் (départs) அனைத்துக்கும் இன்று வெள்ளிக்கிழமையும், நாளை சனிக்கிழமையும் ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Auvergne-Rhône-Alpes மாகாணத்துக்கு வெளிச்செல்லும் வீதிகளுக்கு ‘உட்சபட்ச எச்சரிக்கையாக’ கறுப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேவேளை, உள்வரும் வீதிகளுக்கு (retours) இன்றும் நாளை சனிக்கிழமையும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு உள்வரும் வீதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.