Paristamil Navigation Paristamil advert login

உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் ஜூஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்  ஜூஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

14 பங்குனி 2022 திங்கள் 09:27 | பார்வைகள் : 9091


 உடலில் சேரும் ஆபத்து மிகுந்த கழிவுகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை நாம் அவ்வபோது மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு வகையான மாசுபாடுகள் மற்றும் அசுத்தங்கள் காரணமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கழிவுகள் உங்கள் உடலில் சேர்ந்திருக்கக் கூடும். கழிவுகளை வெளியேற்ற பல்வேறு உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றாலும், உணவுகள் மூலமாகவே அவற்றை வெளியேற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

 
குறிப்பாக ஏபிசி ஜூஸ் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றின் ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்துக்களைத் தான் ஏபிசி என சுருக்கமாக சேர்த்து குறிப்பிடுகிறோம். கழிவுகளை வெளியேற்றுவதற்காக இந்த ஜூஸ்களை அருந்தும்போது, நீங்கள் வெறுமனே எதையும் சேர்க்காமல் அருந்த வேண்டும். ஒருவேளை அதில் சர்க்கரை அல்லது வேறு ஏதேனும் சேர்த்தால், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகும்.
 
ஆப்பிள்: ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், மருத்துவரையே பார்க்க வேண்டியதில்லை என்பது உண்மை தான். ஆன்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி போன்றவை இந்தப் பழத்தில் நிறைவாக உள்ளன. உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
 
 
பீட்ரூட்: பார்ப்பதற்கு நல்ல சிவப்பான கலரில் இருப்பதால், பார்வையிலேயே அனைவரையும் ஈர்க்கக் கூடிய காய்கறி இது. ரத்த சுத்தியை மேம்படுத்தும். உடலின் ஜீரண சக்திக்கு உதவிகரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.பீட்ரூட்ட்டில் நைரேட்ஸ் என்ற வகை வேதிப்பொருள் இருக்கிறது. நீங்கள் சாப்பிட்ட பிறகு அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறும். இதனால், உயர் ரத்த அழுத்தம் குறையும்.
 
 
கேரட்: விட்டமின் ஏ, நார்ச்சத்து, விட்டமின் கே மற்றும் பயோடின் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். குறிப்பாக, கேரட்டில் உள்ள பீடா கரோடின் என்ற சத்து, கண் பார்வையை மேம்படுத்தக் கூடியதாகும். பொதுவாக கேரட் இனிப்புச் சுவை கொண்டது என்றாலும், அதில் நிரம்பியுள்ள நார்ச்சத்து என்பது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கேரட்டில் உள்ள கேல்சியம் மற்றும் விட்டமின் கே போன்றவை உங்கள் எலும்புகளுக்கு வலுவூட்டும்.
 
ஏபிசி ஜூஸ்களின் பலன்கள்:
1. உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
2. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.
3. வயிற்றின் ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு வயிறு உப்புசம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது.
4. குடலில் மைக்ரோப்ஸ் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமாக குடல் நலனை மேம்படுத்த உதவுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்