Paristamil Navigation Paristamil advert login

விசேட செய்தி : நீரில் மூழ்கி 109 பேர் பலி!!

விசேட செய்தி : நீரில் மூழ்கி 109 பேர் பலி!!

11 ஆடி 2025 வெள்ளி 12:42 | பார்வைகள் : 800


 

இந்த கோடைகாலத்தில் 400 இற்கும் மேற்பட்ட நீரில் மூழ்கி தத்தளித்த சம்பவம் (noyades) பதிவாகியுள்ளது.

ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 2 ஆம் திகதி வரையான நாட்களில் மட்டும் 429 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 109 பேர் பலியாகியுள்ளனர். இத்தவலை பிரெஞ்சு சுகாதார நிறுவனம் (Santé Publique France ) இன்று ஜூலை 11 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் நீரில் மூழ்கிய சம்பவம் 95% சதவீதத்தால் அதிகரித்தும், உயிரிழந்த சம்பவம் 58% சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்