மலேசியாவில் ஆற்றில் விழுந்த பொலிஸ் ஹெலிகாப்டர்

11 ஆடி 2025 வெள்ளி 14:49 | பார்வைகள் : 195
மலேசியாவின் ஜோகூர் மாநிலம் புலாய் ஆற்றில் நேற்று ஒரு பொலிஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
பயிற்சிப் பணியின் போது இந்த விபத்து நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (CAAM) உறுதி செய்துள்ளது.
விபத்து நடந்த உடனேயே, மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, விமானி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர்.
காயமடைந்த ஐந்து பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து நடந்ததைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.