இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாகும் சுப்மன் கில்...?

11 ஆடி 2025 வெள்ளி 15:49 | பார்வைகள் : 421
இந்திய ஒருநாள் அணிக்கும் சுப்மன் கில் கேப்டனாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா, கடந்த 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, இரு மாதங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கு, இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை போட்டியில் விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிசிசிஐ தலைமை மாற்றத்தை விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் சுப்மன் கில்லே இந்திய அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது.
வரும், ஆகஸ்டில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடர் ஒத்திவைக்கப்பட்ட உள்ளது. அதேவேளையில், இந்தியா உடன் விளையாடுவது தொடர்பாக பிசிசிஐ உடன் இலங்கை அணி ஆலோசனை நடத்தி வருகிறது.
அதை தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா சென்று, இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது.
இந்த தொடருக்கு, சுப்மன் கில் தான் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டம், இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் அவரது தலைமைத்துவம் ஆகியவை பாராட்டை பெற்றுள்ளது.
ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை.