Paristamil Navigation Paristamil advert login

குடும்பத்துடன் வர இது விடுமுறை கொண்டாட்டம் அல்ல! கோஹ்லிக்கு பதிலடி கொடுத்த காம்பீர்

குடும்பத்துடன் வர இது விடுமுறை கொண்டாட்டம் அல்ல! கோஹ்லிக்கு பதிலடி கொடுத்த காம்பீர்

11 ஆடி 2025 வெள்ளி 15:49 | பார்வைகள் : 127


குடும்பத்தினரை வெளிநாட்டு தொடர்களுக்கு அழைத்து வரும் கட்டுப்பாடு குறித்த விராட் கோஹ்லியின் விமர்சனத்திற்கு, பயிற்சியாளர் கௌதம் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய வீரர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பத்தினர் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையிலான முடிவை பிசிசிஐ அறிவித்தது. இதற்கு கோஹ்லி, ரெய்னா உட்பட பல வீரர்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தினர்.

கோஹ்லி, "வெளியில் நடக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் குடும்பத்திற்குத் திரும்பி வருவது எவ்வளவு மோசமானது என்பதை மக்களுக்கு விளக்குவது மிகவும் கடினம்" என தனது கருத்தை கூறினார்.

இந்த நிலையில் கோஹ்லிக்கு பதில் அளிக்கும் வகையில் தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் (Gautam Gambhir) பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், "குடும்பம் முக்கியம்தான்; ஆனால் நீங்கள் இங்கு வந்திருக்கும் காரணம் வேறு, இது விடுமுறை கொண்டாட்டம் அல்ல. ஒரு உடைமாற்றும் அறையில் இருக்கும் குறைவான ஆட்களுக்குத்தான் ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்பட வைக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன" என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்