Paristamil Navigation Paristamil advert login

€8.6 மில்லியனுக்கு பரிஸில் விற்கப்பட்ட Birkin கைப்பை உலக சாதனை!!!

€8.6 மில்லியனுக்கு பரிஸில் விற்கப்பட்ட Birkin கைப்பை உலக சாதனை!!!

11 ஆடி 2025 வெள்ளி 16:23 | பார்வைகள் : 1200


பரிஸில் நடைபெற்ற Sotheby’s ஏலத்தில், ஹெர்மஸ் நிறுவனம் 1984-இல் ஒரு பிரபல ஆங்கில நடிகை மற்றும் பாடகியுமான ஜேன் பிர்கினுக்காக (Jane Birkin) உருவாக்கிய முதல் பிர்கின் பை (Birkin), வரலாற்றில் இல்லாத அளவுக்கு €8.6 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. 

இந்த கருப்பு தோல் பை, J.B. என்று செதுக்கப்பட்டு, தனித்துவமான வடிவமைப்புகள், நிலைத்த தோல், மற்றும் உலோக வளையங்கள் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இது உலகில் விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த கைப்பையாக மாறியுள்ளது.

பிர்கின் பையின் உருவாகும் பின்னணியில், ஜேன் பிர்கின் தனது பயணத்தில் ஒரு உபயோகமான பை இல்லை என ஹெர்மஸ் தலைவர் ஜீன்-லூயி டூமாஸிடம் (Jean-Louis Dumas) தெரிவித்ததைத் தொடர்ந்து, 1984-இல் இது வடிவமைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பை ஹெர்மஸ் நிறுவனத்தின் அடையாளமாக மாறியுள்ளது. 

மிக குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதால், இது ஒரு "எக்ஸ்க்லூசிவ்" பொருளாகவும், உள்ளது. மேலும் சில மாடல்கள் பல ஆயிரம் யூரோக்கள், ஆனால் சில லட்சக்கணக்கான யூரோக்களையும் எட்டுகின்றன.

இந்த பிர்கின் பையைத் தவிர, Sotheby’s ஏலத்தில் Christian Dior, John Galliano, Thierry Mugler, மற்றும் Alexander McQueen போன்ற பிரபல வடிவமைப்பாளர்களின் விளம்பர பாகங்கள் மற்றும் கலைவேலைப்பாடுகளும் விற்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்