Paristamil Navigation Paristamil advert login

கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது தெரியுமா..?

கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது தெரியுமா..?

11 பங்குனி 2022 வெள்ளி 09:20 | பார்வைகள் : 9201


 ஃபைப்ராய்டு கட்டிகள் அல்லது கர்ப்பப்பை திசு நார்க்கட்டிகள் என்பது இன்றைய உலகில் பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. வெகுஜன மக்களிடையே, இது கர்ப்பப்பை கட்டி என்று அறியப்படுகிறது. பொதுவாக கட்டி என்றாலே அது புற்றுநோய் வகை என நாம் அறிந்து வைத்திருந்தாலும், கர்ப்பப்பை உள்ளே வளரும் இந்த கட்டியான புற்றுநோய் வகையைச் சாராத ஒன்றாற்கும்.

 
வெகுசிலருக்கு கர்ப்பப்பை உள்ளே குழந்தை வளரும் சமயங்களில் இந்த கட்டி உண்டாகக் கூடும். ஆனால், 40 அல்லது 50 வயதை தாண்டிய பெரும்பாலான பெண்களுக்கு இது பொதுப் பிரச்சினையாக மாறி வருகிறது. பார்ப்பதற்கு இது புற்றுநோய் செல் போல தோன்றினாலும், இது கர்ப்பப்பை புற்றுநோயாக மாறாது. மிகவும் அரிதாக, இந்தக் கட்டியானது பெண்களின் பிறப்புறுப்பு வரையிலும் பரவக் கூடும்.
 
உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு 50 வயதை தாண்டுகையில் கர்ப்பப்பை கட்டி உருவாகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், தொடக்க காலத்தில் இது அறிகுறிகள் எதையும் பெரிதாக காட்டுவதில்லை. கட்டியின் வளர்ச்சி மற்றும் வீரியம் அதிகரிக்கும்போது பெண்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி மற்றும் மாதவிடாய் காலத்தில் மிக அதிகப்படியான ரத்தப்போக்கு ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
 
 
கர்ப்பப்பை கட்டியின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து, இதன் அறிகுறிகள் மாறுபடலாம். கர்ப்பப்பை கட்டி வளர்வதற்கு இது ஒன்றே காரணம் என்ற ஒற்றை முடிவு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. மரபு ரீதியான கோளாறுகள், ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன் போன்ற காரணங்களால் கர்ப்பப்பை கட்டி உண்டாகலாம். எனினும், இதற்கான மிகச் சரியான காரணத்தை கண்டறிவது சற்று கடினம்.
 
கர்ப்பப்பை கட்டிக்கான பொதுவான அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பதன் மூலமாக, இவற்றை ஓரளவுக்கு முன்கூட்டியே நாம் கண்டறிய முடியும். உரிய காலத்தில் சிகிச்சை எடுக்கத் தொடங்கினால், அறுவை சிகிச்சை தேவைப்படாது.

கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள்
 
மாதவிடாய் காலத்தில் மிக அதிகப்படியான ரத்தப் போக்கு
மாதவிலக்கு காலம் அதிகரிப்பது. அதாவது, ஒரு மாதத்தில் மாதவிலக்கு அடையும்போது 7 நாட்களுக்கு மேலாக ரத்தப்போக்கு நீடிப்பது.
மிகவும் தீவிரமான வயிற்று வலி
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழிக்கும்போது மிகுந்த அழுத்தம் ஏற்படுவதை உணர்தல், சிறுநீர் கழிக்க சிரமம் அடைதல்
மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகள்
தொடை, வயிறு, அடிவயிறு மற்றும் பின்பகுதியில் வலி
மாதவிடாய் சுழற்சியின்போது அதிக வலியுடன் சிறுநீர் வெளியேறுகிறதா..? ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கை..!

கர்ப்பப்பை கட்டியின் அபாயங்கள்
 
பொதுவாக கர்ப்பப்பை கட்டி பரவாது. உயிருக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. எனினும், இந்த நோய் பாதித்தால் உடலில் நீடித்த பாதிப்புகள் உண்டாகும். இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டி இருந்தால், அவர்கள் கருத்தரிப்பதில் மிகுந்த சிரமங்கள் ஏற்படும். கருத்தரித்த பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டி உருவானது என்றால் குழந்தையின் வளர்ச்சியை அது பாதிக்கும். குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க நேரிடும்.

நோய் தடுப்பு
 
உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும்
பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
பாஸ்ட் புட் வகைகளை தவிர்க்கவும்.
அடிக்கடி மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யலாம்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்