பாண் கொத்து|

11 ஆடி 2025 வெள்ளி 17:10 | பார்வைகள் : 112
புரோட்டீன் நிறைந்து இருக்கும் உணவு பொருள்தான் முட்டை. இது குழந்தைகள் ஞாபக சக்தி அதிகரிக்க உதவும். மேலும் குழந்தைகளுக்கு தசையில் உறுதியை கொடுக்க பயன்படுகிறது. தினமும் ஒன்று அல்லது 2 முட்டை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதில் பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
கோதுமை பிரட் (wheat bread) இது கோதுமை மாவு வைத்து தயார் செய்யப்படுகிறது. இதில் பைபர் என்று சொல்லப்படும் நார்சத்து நிறைந்து காணப்படுகிறது. இன்சுலின் கட்டுப்பாடு, உயர் ஊட்டச்சத்து, சாதாரணமான வெள்ளை ப்ரெட் விட இதில் அதிக அளவில் சத்துக்கள் நீக்கப்படமல் அப்படியே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய முட்டை மற்றும் கோதுமை பிரட் இரண்டும் குழந்தைகளுக்கு கொடுக்க உகந்த உணவு அதை அப்படியே கொடுக்காமல் அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் வித்தியாசமாக செய்து பாருங்க மிச்சம் வைக்காமல் வயிறு நிறைய சாப்பிடுவாங்க.. அப்படி பிரட், முட்டை இருந்த இந்த ப்ரெட் கொத்து ட்ரை பண்ணுங்க!
பிரட் கொத்து செய்ய தேவையான பொருட்கள்: முட்டை, கோதுமை பிரட்,எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, கால் கப் துருவிய கேரட், 1 பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு, சிக்கன் மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி இலை.
செய்முறை விளக்கம்:கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து துருகிய கேரட் சேர்த்து வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும் அதில் உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து அத்துடன் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி வதக்கிய மசாலாவோடு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் பிரட் எடுத்து கார்னரை வெட்டிய பின்னர் பிரட் எடுத்து பொடியாக நறுக்கி முட்டை மசாலாவில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலா நன்கு கோதுமை பிரட் துண்டுகளில் மிக்ஸ் ஆகி வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பிரட் கொத்து ரெடி உங்க வீட்டுக்கு குட்டீஸ்களுக்கும் கண்டிப்பா ஒரு டைம் இந்த ரெசிபி செஞ்சு கொடுத்து அசத்துங்க