இரு இராணுவ வீரர்களுக்கு கத்திக்குத்து! - ஒருவர் கவலைக்கிடம்!!

11 ஆடி 2025 வெள்ளி 16:44 | பார்வைகள் : 466
சிவில் உடையில் இருந்த இரு இராணுவ வீரர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். Clermont-Ferrand (Puy-de-Dôme) நகரில் இச்சம்பவம் நேற்று ஜூலை 10, வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே உள்ள இரவு மதுபான விடுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. சிவில் உடையில் மதுபான விடுதிக்கு வருகை தந்திருந்த இரு இராணுவ வீரர்கள் மீது மூவர் கொண்ட குழு கத்தியால் தாக்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளிகள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.