Paristamil Navigation Paristamil advert login

Google Chrome-க்கு சவாலாக புதிய AI Browser: OpenAI அதிரடி அறிமுகம்

Google Chrome-க்கு சவாலாக புதிய AI Browser: OpenAI அதிரடி அறிமுகம்

11 ஆடி 2025 வெள்ளி 18:57 | பார்வைகள் : 138


டெக் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், OpenAI நிறுவனம் இப்போது புதிய AI சக்தியுடன் கூடிய வலைஉலாவியை (Browser) அறிமுகப்படுத்த தயாராகிறது.

இது தற்போதைய முன்னணிப் போட்டியாளரான Google Chrome-க்கு நேரடியான சவாலாக அமையும் என Reuters தெரிவித்துள்ளது.

இந்த புதிய உலாவி, ChatGPT போன்ற வசதிகளை நேரடியாக உலாவி அனுபவத்தில் ஒருங்கிணைக்கவுள்ளது.

இதில், பயனாளர்கள் நேரடியாக வலைத்தளங்களை அணுகாமல், AI வழிகாட்டும் உதவியுடன் தேடல், விவர சேகரிப்பு மற்றும் ஓன்லைன் செயலிகளை முடிக்க முடியும்.

Google Chrome பயனாளர்களின் புள்ளிவிவரங்களை சேகரித்து Alphabet நிறுவனத்தின் விளம்பர வருமானத்தை இயக்குகிறது.

ஆனால், OpenAI-யின் புதிய உலாவி, இந்த தேடல் பழக்கத்தை மாற்றும் வாய்ப்பு உள்ளதால், Google-ன் விளம்பர வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த உலாவியில் OpenAI-யின் AI உதவியாளர் “Operator” ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், பயனாளர் சார்பாக reservation, form-fillup, purchase செயலிகளையும் மேற்கொள்ளும் திறன் உள்ளது.

இது, சாதாரண உலாவியைப் போல இல்லாமல், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செயல்படும் முனைப்பான (Proactive) உலாவியாக மாற்றும்.

இது Google-ன் Chromium ஓப்பன்-சோர்ஸ் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. முன்னாள் Chrome வலைஉலாவி வல்லுநர்கள் OpenAI-யில் சேர்ந்துள்ளனர் என்பது, Google-க்கு எதிராக OpenAI எவ்வளவு தீவிரமாக செயல்படுகிறது என்பதற்கான சான்றாகும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்