Paristamil Navigation Paristamil advert login

235 பில்லியன் டொலர் நட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி..... !

235 பில்லியன் டொலர் நட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி..... !

11 ஆடி 2025 வெள்ளி 19:57 | பார்வைகள் : 221


அமெரிக்க மத்திய வங்கியின் தற்போதைய நிதிநிலை மிகுந்த கவலையளிக்கும் அளவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த புதன்கிழமை வரை அதன் மொத்த நட்டம் 235 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மீது வெள்ளை மாளிகை கடும் விமர்சனம் எழுப்பியுள்ளது.

நாட்டு நிதி நிலையைச் சீர்செய்வதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், வங்கி தலைமையகமான வாஷிங்டன் DC கட்டிடத்தைப் பழுதுபார்த்துக் கொண்டு இருப்பது பொருத்தமற்றது, என வெள்ளை மாளிகை நிர்வாகம் மற்றும் வரவுசெலவுத்திட்ட இயக்குநர் விமர்சித்துள்ளார்.

மேலும், வட்டியைக் குறைக்கும் முயற்சிகளை பவல் தவிர்ப்பது, ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கடுமையாகக் கண்டிக்கப்படுகிறது.

அதேவேளை வட்டி விகிதங்களை உயர்த்தியதனால், வங்கியின் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்தது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பவல் தலைமையிலான மத்திய வங்கி, அதன் தலைமையக கட்டிடத்தை மேம்படுத்த 2.5 பில்லியன் டாலரைத் தனியாக செலவழித்திருப்பதும் இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க சட்டப்படி, மத்திய வங்கி அதன் வருவாய் லாபத்தை நிதியமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

எனினும் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவருகிறதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்