Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் மெனிடோபா மாகாணத்தில் அவசர நிலை அறிவிப்பு

கனடாவின் மெனிடோபா மாகாணத்தில் அவசர நிலை அறிவிப்பு

11 ஆடி 2025 வெள்ளி 20:57 | பார்வைகள் : 187


கனடாவின் மெனிடோபா மாகாணத்தில் நிலவும் தீவிர காட்டுத்தீ பரவல் காரணமாக மீண்டும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வாழும் மக்கள் உயிர் பாதுகாப்பிற்காக இடம் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலையால், மாகாணத்தில் இரண்டாவது அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக முதல்வர் வாப் கின்யூ தெரிவித்தார்.

பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை விரிவுபடுத்த வேண்டியுள்ளது எனவும் கின்யூ கூறியுள்ளார்.

கடந்த முறையைப் போலவே, லீலா சாக்கர் மையம் மற்றும் பில்லி மோசியென்கோ அரீனாவும் மறுபடியும் மக்கள் தங்குவதற்காக திறக்கப்படுகின்றன.

மேலும், வினிப்பெக் நகர மத்தியிலுள்ள RBC கண்வென்ஷன் மையமும் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அங்கு வார இறுதியில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், அவை மற்றும் வெளியேற்றப்பட்ட மக்கள் இருவருக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த மாநில அரசு முயற்சிக்கின்றது.

நாம் மிக விரைவாக நடவடிக்கைகள் எடுத்து, இவ்வேளையில் மிகவும் அவசியமான வெளியேற்றத்துக்கான வசதிகளை அதிகரிக்கிறோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெனிடோபாவின் கடந்த 30 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான காட்டுத்தீ பரவல். சாதாரணமாக வருடத்திற்கு 94,000 ஹெக்டேயர் நிலம் தான் தீயால் பாதிக்கப்படும். ஆனால், 2025 இல் இது 11 மடங்கு அதிகமாக, ஒரு மில்லியன் ஹெக்டேயர் நிலம் ஏற்கனவே கருகியுள்ளது.

2025 இல் இதுவரை 261 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்போது 105 காட்டுத்தீகள் செயல்பாட்டிலேயே உள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்