டெக்சாஸில் வெள்ளப்பெருக்கு - உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் அபாயம்

11 ஆடி 2025 வெள்ளி 21:57 | பார்வைகள் : 205
அமெரிக்காவின் - டெக்ஸாஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக காணப்படுகிறது.
இந்தநிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் மீட்பு படையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புடன் அனர்த்தத்துக்குள்ளான பகுதியை நேற்று பார்வையிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டில் என்ற இடத்தில் கடந்த 4ஆம் திகதி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் அங்குள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாகவே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.