காஸாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 37 அகதிகள்!!

11 ஆடி 2025 வெள்ளி 20:37 | பார்வைகள் : 434
காஸாவில் இருந்து பிரான்சுக்கு 37 அகதிகள் பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கான புதிய வாழ்க்கை ஒன்றை பிரான்சில் ஏற்படுத்திக்கொடுக்க பிரெஞ்சு அரசு உறுதியளித்துள்ளது.
ஜூலை 11, இன்று வெள்ளிக்கிழமை மாலை சாள்-து-கோல் விமான நிலையத்தில் அவர்கள் வந்து இறங்கினார்கள். இந்த 37 பேரில் ஸ்கொலர்ஷிப் பெற்ற மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸாவின் கான் - யுனிஸ் உட்பட பல நகரங்களில் இருந்து அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.
பிரான்சில் அவர்கள் பணிபுரிய, படிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.