பரிஸ் : யூத தேவாயலம் மீது தாக்குதல் முயற்சி! - ஒருவர் கைது!!

12 ஆடி 2025 சனி 06:00 | பார்வைகள் : 1289
பரிசில் உள்ள யூத தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 11, நேற்று வெள்ளிக்கிழமை பரிஸ் நீதிமன்றம் ஒருவரை விசாரணைகளுக்கு அழைத்து, அவருக்கு தீர்ப்பளித்து சிறையில் அடைத்தது. பிரான்ஸ்-அல்ஜீரிய நபரான குறித்த 20 வயதுடையவர், பரிசில் உள்ள யூத தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
குறித்த நபர் ஜிஹாதி சிந்தனைகளுடன் இருந்ததாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்டவர் எனவும், யூதம் மீது வெறுப்பும் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரெஞ்சு பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புபட்டதாக 15 வயதுடைய சிறுமி ஒருவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.