சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ’One in - One Out' ஒப்பந்தம்! - பிரான்சுக்கு ஆபத்தாக சென்று முடியுமா..?

12 ஆடி 2025 சனி 10:45 | பார்வைகள் : 514
பிரித்தானியாவும் - பிரான்சும் இணைந்து அகதிகளை இடமாற்றும் ’One in - One Out' ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அவரும் வாரங்களில் அது நடைமுறைக்கு வர உள்ளது. பிரித்தானியா செல்லாமல் தடுத்து நிறுத்தப்படும் ஒவ்வொரு அகதிக்கும் பதிலாக பிரான்ஸ் ஒரு அகதியை பிரித்தானியாவுக்கு அனுப்பு. அவர் பிரித்தானியாவில் குடியேறுவதற்கான நியாமான காரணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பதே இந்த ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் பிரான்சுக்கு பின்னடைவாகச் சென்று முடியும் எனவும், அகதிகளை தரம்பிரித்து அனுப்புவது பிரான்சின் வேலை இல்லை எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை அது பின்பற்றவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அகதிகளில் பிரித்தானியா வடிகட்டி எடுத்ததன் பின்னர், பிரான்சில் அகதிகளின் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் எனவும், கட்டுப்பாடில்லாமல் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அகதிகளை திருப்பி அனுப்பும் என்றால் அதன் அர்த்தம் பரிசுக்கோ, மார்செய்க்கோ அல்லது லியோனுக்கோ அல்ல.. அது பா-து-கலேக்கே ஆகும். இதனால் பா-து-கலே குற்றச்செயல்களின் கூடாரமாகிவிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.