Paristamil Navigation Paristamil advert login

லண்டன் எரித் தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து

லண்டன் எரித் தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து

12 ஆடி 2025 சனி 14:51 | பார்வைகள் : 202


பிரித்தானியாவின் ஏரித் தொழில்துறை வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு லண்டனின் எரித் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீயை அணைக்க லண்டன் தீயணைப்புப் படை பெரிய அளவில் களமிறங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்தத் தீயை அணைக்க சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தற்போது சம்பவ இடத்தில் போராடி வருகின்றனர்.

மேபோல கிரெசென்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய இரும்பு வளாகத்திற்குள் இருந்த ஒற்றை மாடி கிடங்கு ஒன்றில் தீப்பிடித்துள்ளது.

இருபத்தைந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தீ விபத்தில் மூன்று அகழ்வாராய்ச்சி கருவிகளும் (diggers) ஏராளமான பிற வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ விபத்தால் ஏற்பட்ட அதிக புகை காரணமாக, அப்பகுதி வாழ் மக்கள் தங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல கோணங்களில் இருந்து தீயை அணைக்கும் விதமாக, இரண்டு 32 மீட்டர் உயரமுள்ள டர்ன்டேபிள் ஏணிகள் மேலே இருந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படுகின்றன.

தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவில்லை; இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்