Paristamil Navigation Paristamil advert login

உணவு உண்பது எதற்காக?

உணவு உண்பது எதற்காக?

5 பங்குனி 2022 சனி 13:44 | பார்வைகள் : 9901


 உடல் உயிர்ப்புடன் இருப்பதற்காகவும், செயல்படுவதற்காகவும், செல் பிரிதல் தொடர்ந்து நடைபெறவும், பழைய செல்கள் இறந்து- புதிய செல்கள் உருவாகி உடல் வளர்ச்சியை அடைவதற்காகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காகவும்... இப்படிப் பல காரணங்களுக்காக உணவு உட்கொள்ள வேண்டிய அவசியம் எல்லா உயிரினத்துக்கும் உண்டு.

 
நமது உடல் சிறந்ததொரு இயந்திரம் போன்றது. இயந்திரம் தொடர்ந்து இயங்க டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள் எப்படித் தேவையோ, அதுபோல் உடல் இயக்கம் தொடர்ந்திட, உணவு என்ற எரிபொருள் மிகவும் அவசியம்.
 
 
உடல்நிலை, வயது, உடல் உழைப்பு, உயரம் இவற்றுக்கு ஏற்ப உணவில், ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் சேருவதுதான் சீரான உணவு முறை எனப்படும். இவ்வாறு சேரும்போது உடல் நலம் பேணப்படுவதால் அதை சத்துணவு என்றும் சொல்கிறோம்.
 
உடலுக்கு புரதம், மாவு, கொழுப்பு, தண்ணீர், வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துக்கள் மற்றும் தனிமங்கள் போன்ற சத்துக்கள் தேவை. புரதச் சத்து, உடலின் வளர்ச்சிக்குத் தேவை. மாவுச் சத்து, உடல் இயங்குவதற்கான சக்தியைத் தருகிறது. கொழுப்புச் சத்து உடலுக்குக் கூடுதல் ஆற்றலைத் தருகிறது. கொழுப்புச் சத்தும், மாவுச் சத்தும் சரியான அளவில் சேர்ந்தால்தான் புரதச் சத்தால் உடல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு செயல்பட முடியும். இப்படி ஒவ்வொரு பணியையும் பிரித்துச் செய்கிற இந்த சத்துக்கள், மனிதர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்