30% சதவீத வரி.. மக்ரோன் கண்டனம்!!

12 ஆடி 2025 சனி 19:19 | பார்வைகள் : 1024
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% சதவீத வரியை அறிவித்தார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த அறிவிப்பு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
10% சதவீதமாக இருந்த வரி, வரும் ஓகட்ஸ் 1 ஆம் திகதியில் இருந்து 30% சதவீதமாக அதிகரிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதை அடுத்து, இந்த அதிகரிப்பு தனது வலுவான எதிர்ப்பினை மக்ரோன் பதிவு செய்வதாக அறிவித்தார்.
நம்பகமான எதிர் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார். இந்த வரி அதிகரிப்பு ஐரோப்பிய சந்தைகளில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துவதுடன், அட்லாண்டிக் கடல்கடந்த விநியோகங்களை சீர்குலைக்கும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.