Paristamil Navigation Paristamil advert login

‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு... நடந்தது என்ன?

‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு... நடந்தது என்ன?

13 ஆடி 2025 ஞாயிறு 13:32 | பார்வைகள் : 216


பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு நெஞ்சுவலி காரணமாக சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்தார். அவருக்கு வயது 52.விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு பின், 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் நீலம் production தயாரிப்பில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 10.07.25 முதல் நடைபெற்று வருகிறது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன்ராஜ் (52) என்வர் திரைப்பட சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். படப்பிடிப்பில், காரிலிருந்து குதிக்கும்போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் தவறி விழுந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மோகன்ராஜ் ஸ்டண்ட் யூனியனின் முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்