Paristamil Navigation Paristamil advert login

நாவல் பழ சட்னி

நாவல் பழ சட்னி

13 ஆடி 2025 ஞாயிறு 13:32 | பார்வைகள் : 125


தோசை, இட்லிக்கு எப்பொழுதுமே சாதாரண தேங்காய், தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் எப்படி... சட்னியில் வெரைட்டியான சட்னியை செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதில் குறிப்பாக தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் நாவல் பழ சட்னி வைரலானது. அந்த நாவல் பழம் சட்னியை வீட்டிலேயே சோலபமாக செய்வதே எப்படி என்பது குறித்து இந்த செய்து தொகுப்பில் பார்க்கலாமா...

இதற்கு தேவையான பொருட்கள் என்னென்றால், நாவல் பழம், தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சர்க்கரை, புளி, மிளகு, சீரகத் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாவல் பழங்களை நன்கு கழுவி, நாவல் பழ சதைகளை வெட்டி விதையை அவற்றி வைத்துக் கொள்ள வேண்டும். தோலை நீக்கத் தேவையில்லை. இந்த தோல் சட்னிக்கு சுவை கொடுக்கும்.

மிக்ஸி ஜாரில் நறுக்கிய நாவல் பழம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, வெல்லம் (அல்லது சர்க்கரை), புளி (அல்லது எலுமிச்சை சாறு), மிளகு தூள், சீரகத் தூள், கால் டம்ளர் தண்ணீர் இவை அனைத்தையும் நன்கு அரைத்துப் ஒரு சட்னி பதத்திற்கு எடுத்துக்கொள்ளவும்.

பிறகு சுவையை சோதித்து, தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதற்கிடையில் ஒரு தவாயில் எண்ணெயை ஊற்றி கடுகு சீரகம், கருவேப்பிலை உளுந்து ஆகியவற்றை போட்டு தாளித்து அதனை சட்னியுடன் சேர்த்து கிண்டி விட வேண்டும்.

இந்த சட்னியை இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் தொட்டுச் சாப்பிடலாம். குறிப்பாக தயிர் சாதம், புளி சாதம், சிறுதானிய சாதங்கள் ஆகியவற்றுக்கும் சேர்த்து இந்த நாவல்பழ சட்னியை சாப்பிட்டால் அம்புட்டு ருசியாக இருக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்