தேசிய தினம் மற்றும் கிளப் இறுதிப்போட்டியை முன்னிட்டும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள்!!!

13 ஆடி 2025 ஞாயிறு 16:48 | பார்வைகள் : 1431
ஜூலை 14 சாம்ஸ்-எலிசே வீதியில் நடைபெறும் பாரம்பரிய இராணுவ அணிவகுப்பை நிகழ்வை ஒட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் PSG மற்றும் Chelsea இடையிலான கிளப் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டுட்டும் ஏற்பாடுகள், ஞாயிறு இரவிலேயே பகுதியளவில் அமுலுக்கு வரவுள்ளது.
ஜூலை 13 மற்றும் 14 இரவுகளில் நடைபெறும் கச்சேரி மற்றும் பட்டாசு விழாவை முன்னிட்டு, 12,000க்கு மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் இராணுவம் பரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குவிக்கப்பட உள்ளனர். மேலும் 300 நகர்ப்புற காவல் துறையினரும் 400 தீயணைப்பு வீரர்களும் ஜூலை 14 இரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விரோத கூட்டங்களுக்கு தடை
பாதுகாப்பு வட்டங்களில் நுழைவதற்கான விதிகள் கடுமையாக உள்ளன. விரோதக் கூட்டங்கள், வினோதப் பட்டாசுகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் அச்சுறுத்தும் பொருட்கள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு விசாரணை, பைகளின் பார்வை சோதனை மற்றும் தேடல், வாகன சோதனை ஆகியவை காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும். ஆபத்தான நாய்கள் நுழைவதும் தடை செய்யப்பட்டுள்ளது.