Paristamil Navigation Paristamil advert login

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

 இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

13 ஆடி 2025 ஞாயிறு 15:36 | பார்வைகள் : 638


பிரபல மலையாள ராப் பாடகரான வேடன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.மலையாளத்தில் பிரபல ராப் பாடகராக உள்ள வேடன், தனது புரட்சிகரமான மற்றும் அரசமைப்புக்கு எதிரான பாடல்களால் பிரபலமானவராகவும், சர்ச்சைக்குரியவராகவும் அறியப்படுகிறார். மலையாளத்தில் இவர் பாடிய வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ் ஆல்பம் தமிழிலும் இவருக்கு பலரை ரசிகர்களாக்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் வேடன். இயக்குனர் விஜய் மில்டனின் ‘கோலி சோடா லெகஸி’யில் வேடன் இணைவதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகியுள்ளது.

வேடனின் உண்மை பெயர் ஹிரண்தாஸ் முரளி. இவரது தாயார் ஒரு ஈழத்தமிழர். ஈழப் போரின்போது தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்த அவர், கேரளாவை சேர்ந்த முரளி என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். வேடன் சிறுவயது முதலே பாடலில் ஆர்வம் கொண்டிருந்த நிலையில் வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ் மூலம் புகழ்பெற்ற அவர் விளிம்புநிலை மக்களுக்கான குரலாக பாடல்களை பாடி வருகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்