இந்திய அணியின் அணித்தலைவரின் சொத்துமதிப்பு என்ன தெரியுமா?

13 ஆடி 2025 ஞாயிறு 18:24 | பார்வைகள் : 530
இந்திய அணியின் அடுத்த தலைமுறை வீரராக கருதப்படும் சுப்மன் கில், அணித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
25 வயதே ஆன சுப்மன் கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், சதமும் அடித்து புதிய சாதனை படைத்தார்.
இவரது ஆட்டத்தை போன்று இவருடைய சொத்துமதிப்பும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது விளம்பர ஒப்பந்தங்கள், முதலீடுகள் மூலமும் வருமானத்தை பெற்று வருகிறார்.
BCCIன் A தர ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது, இதுதவிர டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம், டி20 போட்டிக்கு 3 லட்சம் சம்பளமாகும்.
நைக், ஜேபிஎல், கிலெட், சிஇஏடி, டாட்டா கேப்பிட்டல், பாரத்பே மற்றும் மை11சர்க்கிள் உள்ளிட்ட பல பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இதன்மூலமும் ஆண்டுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
இவரது சொத்துமதிப்பு சுமார் 34 கோடி ரூபாயாக உள்ளது. கில்லின் மாத வருமானம் ரூ.50 லட்சத்தைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் அவரது ஆண்டு வருமானம் ரூ.4 முதல் ரூ.7 கோடி வரை இருக்கும்.